உள்ளூர் செய்திகள்
குன்னூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தன்னார்வலர்களுக்கு பேரிடர் மீட்பு பயிற்சி
- பூஷ்ணகுமார் அடையாள அட்டைகளை வழங்கினார்
- 200-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்பு
அருவங்காடு,
நீலகிரி மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவ மழை துவங்க உள்ளது. இதனால் அந்த பகுதிகளில் பலத்த மழை, சூறாவளி காற்று. நிலச்சரிவு. வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே தீயணைப்பு. வருவாய்த்துறை மற்றும் போலீசாருக்கு இக்கட்டான நேரங்களில் உதவியாக செயல்படுவதற்காக குன்னூரில் தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு குன்னூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை திட்டத்தின்கீழ் சமுதாய பங்களிப்பின் அவசியம் குறித்த பேரிடர் மீட்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
தொடர்ந்து அவர்களுக்கு கோட்டாட்சியர் பூஷ்ணகுமார் அடையாள அட்டைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் தீயணைப்பு துறையினர் மற்றும் 200-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.