உள்ளூர் செய்திகள்
விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது.
பேரிடர் முதலுதவி விழிப்புணர்வு பயிற்சி
- வெள்ளம் மற்றும் நெருப்பு போன்றவற்றால் பேரிடர் ஏற்படும் போது முதலுதவி அளிப்பது குறித்து விழிப்புணர்வு பயிற்சியினை வழங்கினர்.
- வெள்ளத்திலிருந்து மீட்க பயன்படுத்தும் சாதனங்களை காட்சிப்படுத்தி அவற்றினை கையாளும் முறைகள் பற்றி விவரித்தார்.
திருவையாறு:
திருவையாறு தாலுகா ஆபீசில் பேரிடர் முதல்நிலைப் பணியாளர்களுக்கு பேரிடர் முதலுதவி விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது. தாசில்தார் பழனியப்பன் தலைமையில் நடந்த முகாமில் திருவையாறு தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் கலந்துகொண்டு வெள்ளம் மற்றும் நெருப்பு போன்றவற்றால் பேரிடர் ஏற்படும்போது முதலுதவி அளிப்பது குறித்து விழிப்புணர்வு பயிற்சியினை வழங்கினர்.
மேலும், தீத்தடுப்பு சாதனங்கள் மற்றும் வெள்ளத்திலிருந்து மீட்கப் பயன்படுத்தும் சாதனங்களைக் காட்சிப்படுத்தி, அவற்றினைக் கையாளும் முறைகள் பற்றி விவரித்தனர்.
முகாமில் தேர்தல் துணை வட்டாட்சியர் அகத்தியன், முதல்நிலைப் பணியாளர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.