உள்ளூர் செய்திகள்

அதிகரட்டி பேரூராட்சியில் வளர்ச்சி திட்டப்பணிகள் உதவி இயக்குனர் நேரில் ஆய்வு

Published On 2022-11-30 09:28 GMT   |   Update On 2022-11-30 09:28 GMT
  • பூங்கா பகுதிகளிலும் உதவி இயக்குனர் ஆய்வு செய்தார்.
  • பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மஞ்சூர்,

நீலகிரி மாவட்டம் அதிகரட்டி பேரூராட்சிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறிப்பாக சிறப்பு பகுதி மேம்பாடு திட்டத்தின் மூலம் மணியாபுரம் பகுதியில் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பு சுவருடன் கூடிய மழைநீர் வடிகால்வாய் மற்றும் துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய கழிப்பிடம் கட்டுதல், 15-வது நிதிக்குழு திட்டத்தின் மூலம் பேரூராட்சிகுட்பட்ட கிளிஞ்சாடா கிராமத்தில் ரூ.6.50 லட்சத்தில் வடிகால்வாய் அமைத்தல், நபார்டு திட்டத்தின் மூலம் ரூ.53 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைத்தல் உள்பட பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இப்பணிகளை நேற்று பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் இப்ராகீம்ஷா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் அதிகரட்டி பேரூராட்சி செயல் அலுவலர் ஜெகநாதன், இளநிலை பொறியாளர் விஜயகுமார் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றார்கள். இதை தொடர்ந்து காந்திபேட்டை முதல் ஓரநள்ளி வரை உள்ள சாலையின் பாதுகாப்பு மற்றும் பேரூராட்சியின் வளம் மீட்பு பூங்கா பகுதிகளிலும் உதவி இயக்குனர் ஆய்வு செய்தார்.

Tags:    

Similar News