உள்ளூர் செய்திகள்

மாவட்ட கலெக்டர் ஷர்வன் குமார் கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பகுதியில் குளம் அமைக்கும் பணியை பார்வையிட்டார்.

கள்ளக்குறிச்சியில் ரூ.384.58 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகள்: மாவட்ட கலெக்டர் ஆய்வு

Published On 2022-08-07 07:55 GMT   |   Update On 2022-08-07 07:55 GMT
  • கள்ளக்குறிச்சியில் ரூ.384.58 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.
  • பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என மாவட்ட கலெக்டர், நகராட்சி ஆணையரிடம் அறிவுறுத்தினார்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதயில்கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் ஆய்வு மேற்கொண்டார். அதன்படி கள்ளக்குறிச்சி நகராட்சியில் ஏமப்பேர் பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.121 லட்சம் மதிப்பீட்டில் குளம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை ஆய்வு செய்து, குளத்திற்கு மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தி டவும், குளக்கரையின் மேல் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்வதற்கான நடைபாதையும், பூங்கா அமைப்பதற்கான பணிகளையும் விரை ந்து மே ற்கொள்ள அறிவுறுத்தினார். பின்னர் ஏமப்பேர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நீர் உந்து நிலையத்தை பார்வையிட்டார். அப்போது கூட்டுக் குடிநீர் திட்டத்தின்கீழ் தினசரி குடிநீர் வழங்கிடவும், நீரினை குளோரினேஷன் செய்து, தூய்மையாக நீரை பொதுமக்களுக்கு விநியோகித்திட அறிவுறுத்தினார்.

தொடர்ந்து ஏமப்பேரில் கலைஞர் நகர்ப்புற மேம்பா ட்டுத்திட்டத்தின்கீழ் ரூ.148.58 லட்சம்மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நவீன எரிவாயு தகன மேடை கட்டுமான பணியினையும், சீத்தா ராமன் பார்க் அருகில் ரூ.115 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தினை ஆய்வு செய்தார். கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில் மொத்தம் ரூ.384.58 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்தார். அப்போது பணிகளை தரமாக, விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என மாவட்ட கலெக்டர், நகராட்சி ஆணையரிடம் அறிவுறுத்தி னார். ஆய்வின்போது கள்ளக்குறிச்சி நகர்மன்றத் தலைவர் சுப்புராயலு, நகராட்சிப் பொறியாளர் முருகன் மற்றும் நகராட்சிப் பணியாளர்கள், அரசு அலுவலர்கள் பலரும் உடனிருந்தனர்.

Tags:    

Similar News