உள்ளூர் செய்திகள்

ஊட்டியில் தி.மு.க மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம்

Published On 2023-07-25 15:48 IST   |   Update On 2023-07-25 15:48:00 IST
  • மாநில திமுக மகளிர் அணி இணை செயலாளர் குமரி ஜெயகுமார் தலைமை தாங்கினார்.
  • மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

ஊட்டி,

மணிப்பூரில் பெண்கள் மீதான வன்கொடுமையை கண்டித்து தி.மு.க. மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கட்சியின் துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. அறிவித்து இருந்தார். அதன்படி நீலகிரி மாவட்டம் ஊட்டி ஏ.டி.சி. சுதந்திர திடல் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மாநில திமுக மகளிர் அணி இணை செயலாளர் குமரி ஜெயகுமார் தலைமை தாங்கினார். நீலகிரி மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக் முன்னிலை வகித்தார். மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ஜெயகுமாரி வரவேற்றார். முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பெண்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு தலைவர்கள் மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்பாட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர்கள் ரவிகுமார், லட்சுமி, மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முஸ்தபா, காசி லிங்கம் ,திராவிடமணி, ராஜூ, மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளர் வாசிம் ராஜா, நகர செயலாளர்கள் ஜார்ஜ், ராமசாமி, தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் தொரை, செல்வம்,

மோகன்குமார் மாவட்ட பொறுப்பாள்கள் எல்கில் ரவி, ராஜா, ஆல்வின், நகராட்சி தலை வர்கள் வாணீஸ்வரி,பரிமளா, ஊராட்சி ஒன்றிய தலை வர்கள் சுனிதா, கீர்த்தனா, பேரூராட்சி தலைவர்கள் ஜெயகுமாரி, கவுரி, சித்ராதேவி, வள்ளி, சத்திய வாணி, ராதா, பங்கஜம், முன்னாள் மாவட்ட ஊரா ட்சி தலைவர் கோமதி, மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் வெண்ணிலா, மைமூனா, காவேரி, செல்லம், லலிதா, கீதா, யசோதா, ஜெயந்தி, அன்ன புவனேஸ்வரி, சரோஜா, விசா லாட்சி, உட்பட கழக மகளிர் அணி நிர்வாகிகள், தோடர் பழங்குடியின சமுதாய தலைவர் சத்தி யராஜ், கோத்தர் பழங்குடி சமுதாய நிர்வாகி சகுந்தலா உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர். மாவ ட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் கண்ணம்மா நன்றி கூறினார்.

Tags:    

Similar News