உள்ளூர் செய்திகள்
கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி.
குமாரபாளையத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
- கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தினர் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் வட்டத்தலை வர் தியாகராஜன் தலை மையில் நடைபெற்றது.
- 6 ஆண்டுகளில் 30 சதவீதம் என்பதை 3 ஆண்டுகளில் 50 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கை கள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
குமாரபாளையம்:
குமாரபாளையம் கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தினர் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் வட்டத்தலை வர் தியாகராஜன் தலை மையில் நடைபெற்றது. பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஈட்டிய விடுப்பு, அகவிலைப்படி வழங்க வேண்டும், பயணப்படி ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும், கிராம நிர்வாக அலுவலர்க ளுக்கான பதவி உயர்வு 6 ஆண்டுகளில் 30 சதவீதம் என்பதை 3 ஆண்டுகளில் 50 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கை கள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வி.ஏ.ஓ.க்கள் முருகன், செந்தில்குமார், ஜனார்த்தனன், தேவராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.