உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம் நடந்த காட்சி.

செம்பனார்கோயிலில் ஊராட்சி வளர்ச்சி சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Published On 2023-02-07 15:15 IST   |   Update On 2023-02-07 15:15:00 IST
  • 3 மாதங்களாக நூறு நாள் வேலை செய்த ஏழை பொதுமக்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை.
  • தமிழக ஏழை மக்களை பழிவாங்கும் நோக்கில் ஒன்றிய அரசு செயல்பட்டுவருவதாகவும் இதன்போக்கை கைவிட வலியுறுத்தினர்.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலக வாசலில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அலுவலர்கள் சங்கத்தினர் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்திற்காக 2023-2024ம் ஆண்டிற்கான நிதியை 33 சதவீதம் மத்திய பட்ஜெட்டில் குறைத்து ஒதுக்கீடு செய்யப்பட்டதை கண்டித்தும், நிதி குறைக்கப்ப ட்டதால் பெரும்பாலான ஏழை பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் உடனடியாக 100 நாள் வேலை திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க வலியுறுத்தினர்.

3 மாதங்களாக நூறு நாள் வேலை செய்த ஏழை பொதுமக்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை.

தமிழக ஏழை மக்களை பழிவாங்கும் நோக்கில் ஒன்றிய அரசு செயல்பட்டுவருவதாகவும் இதன்போக்கை கைவிட வலியுறுத்தினர்.

இதற்கு முன்னதாக வட்டாரத் தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார்.

மாநில பொருப்பாளர் மாரி தஷ்ணாமூர்த்தி, பொன் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் மாதவன் வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

முடிவில் பொருளாளர் நன்றி கூறினார்.

Tags:    

Similar News