ஓகேனக்கல்லில் தாழ்வாக உள்ள மின்கம்பிகளை கடந்து செல்லும் லாரியை படத்தில் காணலாம்.
மின்கம்பத்தில் தாழ்வாக உள்ள மின்கம்பிகளை உயர்த்தி அமைக்க கோரிக்கை
- ஊட்டமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின் கம்பிகள்தாழ்வாக அமைக்கப் பட்டுள்ளது.
- மின் வாரிய துறையினர் தாழ் வாக உள்ள மின் கம்பிகளை உயர்த்தி அமைக்கப்பட வேண்டும்.
ஒகேனக்கல்,
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் சுற்றுலா தலத்திற்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வேன், கார், பஸ் இதுபோன்ற வாகனங்களில் அதிக அளவில் வருகின்றனர். இதனால் எப்போதும் ஒகேனக்கல் பரபரப்பாக காணப்படும்.
இது மட்டும் இல்லாமல் ஒகேனக்கல்லில் இருந்து அஞ்செட்டி வழியாக ஓசூர், பெங்களூர் செல்லக்கூடிய சாலையில் ஏராளமான வாகனங்கள் வருகின்றன.
குறிப்பாக ஒகேனக்கல், ஊட்டமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின் கம்பிகள்தாழ்வாக அமைக்கப்பட்டுள்ளது.
இதனால் இவ்வழியாக செல்லக்கூடிய சரக்கு வாகனங்கள்,பேருந்து, வைக்கோல் ஏற்றி செல்ல கூடிய லாரிகள் உரசும் அளவிற்கு இந்த மின் கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது.
பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பே விபத்தை தடுக்கும் வகையில் மின் வாரிய துறையினர் தாழ்வாக உள்ள மின் கம்பிகளை உயர்த்தி அமைக்கப்பட வேண்டும்.
மேலும் இரவு நேரங்களில் மின்வெட்டு அதிக அளவில் தினந்தோறும் ஏற்படுகிறது. இரவு நேரங்களில் மின் ஊழியர்கள் இருப்பதில்லை. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரவு நேரங்களிலும் ஊழியர்கள் பணியில் இருக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.