உள்ளூர் செய்திகள்

தூய்மை பணியாளர்களுக்கு விலையில்லா மளிகை தொகுப்பு வழங்கப்பட்டது.

தூய்மை பணியாளர்களுக்கு மளிகை தொகுப்பு வழங்கல்

Published On 2022-10-18 09:47 GMT   |   Update On 2022-10-18 09:47 GMT
  • ரூ.50 ஆயிரம் மதிப்பில் விலையில்லா மளிகை தொகுப்புகள் வழங்கல்.
  • தூய்மை பணியை பாராட்டி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தஞ்சாவூர்:

தஞ்சை மாநகராட்சியில் பணிபுரியும் பாதாள சாக்கடை திட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் பணியை கவுரவிக்கும் வகையில் தீபாவளியை முன்னிட்டு அவர்களுக்கு தஞ்சை ஜோதி அறக்கட்டளை சார்பில் 18 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய விலையில்லா மளிகை தொகுப்புகள் வழங்கப்பட்டது.

தஞ்சை ரெயிலடி அருகே உள்ள பாதாள சாக்கடை திட்ட தூய்மை பணியாளர்கள் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தஞ்சை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா மற்றும் தஞ்சை நகர போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சுமார் 50 பாதாள சாக்கடை திட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பில் விலையில்லா மளிகை தொகுப்புகளை வழங்கினார்.

மேலும், அவர்கள் நகரை தூய்மையாக வைத்திருக்க முகம் சுளிக்காமல் செய்யும் தூய்மை பணியை பாராட்டி தீபாவளி வாழ்த்துக்களையும் தெரிவித்தார். நிகழ்ச்சியில் பாதாள சாக்கடை திட்ட தூய்மை பணியாளர்களின் மேலாளர் மனோகரன், கண்காணிப்பாளர் சாமிநாதன், மாநகராட்சி கவுன்சிலர் உஷா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபு ராஜ்குமார் மேற்பார்வையில் அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News