உள்ளூர் செய்திகள்

வாய்க்கால் வழியாக பிணத்தை கொண்டு செல்லும் காட்சி.

குறிஞ்சிப்பாடி அருகே வாய்க்காலில் பிணத்தை சுமந்து செல்லும் அவலம்: பாலம் கட்டித் தர கோரிக்கை

Published On 2023-06-06 09:22 GMT   |   Update On 2023-06-06 09:22 GMT
  • கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்கள் பயன்படுத்தி வரும் பாதையில் 15 அடி ஆழமான வாய்க்கால் உள்ளது
  • ஆபத்தான பள்ளத்தில் இறங்கி செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

கடலூர்:

கடலூர் மாவட்டம் குறிஞ்சிபாடி அம்பேத்கர் நகர் பகுதியில் வசித்து வரும் கிறிஸ்தவ மதத்தவ ர்களுக்கான சடலத்தை புதைக்கும் சுடுகாடு கே.கே. நகர் மேற்கு பகுதியில் உள்ளது. இந்த சுடுகாட்டுக்கு செல்ல கடந்த 50 ஆண்டுகளு க்கும் மேலாக இவர்கள் பயன்படுத்தி வரும் பாதையில் 15 அடி ஆழமான வாய்க்கால் உள்ளது ஒவ்வொரு முறையும் சடலத்தை சுமந்து செல்லும் பொழுது 15 அடி வாய்க்காலில் தண்ணீரில் மிதந்து சென்று எடுத்துச் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.

சுடுகாட்டிற்கு செல்வதற்கு பாலம் கட்டித் தர கடந்த 50 ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் மாவ ட்ட நிர்வாகம் இது வரை பாலம் கட்டித் தரவில்லை எனவும் இதனால் ஒவ்வொரு முறையும் உடலை 15 அடி ஆழமான ஆபத்தான பள்ளத்தில் இறங்கி செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். தற்ேபாது அப்பகுதியில் இறந்த கூலித் தொழிலாளி மரியதாஸ் உடலை 15 அடி ஆழமான வாய்க்கால் பள்ளத்தில் இறங்கி எடுத்துச் சென்ற காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதை அடுத்து உடனடியாக மாவட்ட நிர்வாகம் பாலம் கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News