உள்ளூர் செய்திகள்

கடலூரில் பட்டப்பகலில் துணிகரம்: வணிகவரித்துறை அதிகாரியை தாக்கி துணிகர கொள்ளை

Published On 2022-11-18 14:42 IST   |   Update On 2022-11-18 14:42:00 IST
  • மாநில வரி அலுவலர் அரவிந்தை கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்திற்கு பேச வேண்டும் என கூறி அழைத்து சென்றனர்.
  • புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து குணசேகரன் உட்பட 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

கடலூர்:

கடலூர் கூத்தப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 40).கடலூர் வணிகவரித்துறை அலுவலகத்தில் மாநில வரி அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் அதே அலுவலகத்தில் 30 வயது பெண் ஒருவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர்கள் 2 பேரும் நட்பாக பழகி பேசிக் கொண்டிருந்தனர். இதனால் அந்த பெண்ணின் தந்தை குணசேகரன்2 பேரையும் பலமுறை கண்டித்து உள்ளார். சம்பவத்தன்று குணசேகரன் மற்றும் 3பேர் வணிகவரித்துறை அலுவலகத்திற்கு நேரில் வந்தனர். பின்னர் மாநில வரி அலுவலர் அரவிந்தை கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்திற்கு பேச வேண்டும் என கூறி அழைத்து சென்றனர். அப்போது குணசேகரனுக்கும், அரவிந்துக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. . இதில் குணசேகரன் மற்றும் 3 பேர் திடீரென்று மாநில வரி அலுவலர் அரவிந்தை சரமாரியாக தாக்கினர்.

மேலும் அவர் அணிந்திருந்த 9 பவுன் செயின் மற்றும் அவரிடம் இருந்த விலை உயர்ந்த 2 ஐபோன் ஆகியவற்றை பறித்து கொலை மிரட்டல் விடுத்தனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த அரவிந்த் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்‌. இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து குணசேகரன் உட்பட 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். கடலூரில் பட்டப்பகலில் வணிகவரித்துறை அலுவலகம் அருகே மாநில வரி அலுவலர் அரவிந்தை தாக்கி நகை மற்றும் ஐபோன் பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.‌

Tags:    

Similar News