உள்ளூர் செய்திகள்

குமாரபாளையத்தில் சின்னப்பநாயக்கன்பாளையம் பகுதியில் மரம் சாய்ந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் அதனை அகற்ற வேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குமாரபாளையத்தில் மரம் சாய்ந்து விழும் அபாயம்

Published On 2022-06-15 09:58 GMT   |   Update On 2022-06-15 09:58 GMT
குமாரபாளையத்தில் மரம் சாய்ந்து விழும் அபாயத்தால் அதனை அகற்ற வேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குமாரபாளையம்:

குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம் பகுதி இடைப்பாடி சாலையில் பாலம் அருகே உள்ள பேக்கரி முன்பாக உள்ள பழைய மரம் ஒன்று பிடிமானம் இல்லாமல் எந்நேரமும் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. அசம்பாவிதம் ஏற்படும் முன்பாக, அந்த மரத்தை அகற்ற வேண்டி, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து ஊர்க் கவுண்டர் இளங்கோ கூறியதாவது:

குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதியில் பட்டுப்போன மரம் ஒன்று சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் குழந்தைகளுடன் வீட்டில் இருக்கவே அஞ்சும் நிலை உள்ளது.

பேக்கரி முன்பு இந்த மரம் உள்ளதால் அதிக பொதுமக்கள் இங்கு வந்து செல்லும் போது மரம் சாய்ந்தால் உயிரிழப்புகள் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பேக்கரி கடை மீது மரம் சாய்ந்தாலும் பல ஆயிரம் மதிப்பிலான பொருள் இழப்பும் ஏற்படும். அனைத்து வகையிலும் ஆபத்தான நிலையில் உள்ள மரத்தை குமாரபாளையம் நகராட்சி நிர்வாகத்தினர் உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News