உள்ளூர் செய்திகள்

தினசரி பாதிப்பு மீண்டும் உயர்வு- நெல்லையில் இன்று 110 பேருக்கு கொரோனா

Published On 2022-07-09 08:58 GMT   |   Update On 2022-07-09 08:58 GMT
  • கடந்த ஒரு வாரமாக பாதிப்பு சற்று அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வருகிறது.
  • புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் மாநகர பகுதியில் மட்டும் 36 பேர் அடங்குவர்.

நெல்லை:

தமிழகத்தின் பல்வேறு மாவட் டங்களில் கொரோனா பாதிப்பு நாள் தோறும் உயர்ந்து வருகிறது.

நெல்லை

நெல்லை மாவட்டத்தில் கடந்த மாத தொடக்கத்தில் ஒற்றை இலக்கத்தில் இருந்த தினசரி பாதிப்பு படிப்படியாக அதிகரித்து 50-ஐ கடந்தது.

கடந்த ஒரு வாரமாக பாதிப்பு சற்று அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வருகிறது. நேற்று முன்தினம் பாதிப்பு 93-ஆக இருந்தது. நேற்று 73-ஆக சரிந்தது.

புதிய பாதிப்பு

இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் இன்று புதிதாக 110 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இதில் அரசு மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற சோதனையில் மட்டும் 90 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

தனியார் மருத்துவ மனைகள் மற்றும் ஆய்வகங்களில் நடத்த ப்பட்ட பரிசோதனையில் 20 பேர் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

மாநகரில் அதிகம்

புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் மாநகர பகுதியில் மட்டும் 36 பேர் அடங்குவர். நாங்குநேரியில் 21 பேர், வள்ளியூரில் 14 பேர், அம்பை, ராதாபுரத்தில் தலா 10 பேர், மானூரில் 7 பேர், களக்காட்டில் 6 பேர், பாளையில் 4 பேர், பாப்பாக்குடியில் 2 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

இவர்களில் பெரும் பாலானோர் வீட்டு தனிமையில் சிகிச்ைச பெற்று வரும் நிலையில், ஒரு சிலர் மட்டும் ஆஸ்பத்திரியில் சேர்ந்துள்ளனர். அவர்களுக்கும் தொற்று பாதிப்பு தீவிரமாக இல்லை. எனினும் அவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News