உள்ளூர் செய்திகள்

கடலூரில் பரபரப்பு-பெண் காவலர் மகளை கடத்திய போலீஸ்காரர்

Published On 2022-08-19 13:51 IST   |   Update On 2022-09-14 14:50:00 IST
  • வீட்டில் இருந்த கல்லூரி மாணவி திடீரென்று காணவில்லை.
  • வேல்முருகன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர்:

கடலூர் உட்கோட்ட த்திற்குட்பட்ட பெண் காவலரின் மகள் தனியார் கல்லூரியில் படித்து வருகின்றார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த கல்லூரி மாணவி திடீரென்று காணவில்லை. மேலும் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக விசாரணை செய்த போது போலீஸ்காரராக பணிபுரிந்து வரும் கடலூரை சேர்ந்த வேல்முருகன் என்பவர் தனது உறவினர்கள் உடந்தையுடன் பெண் காவலரின் மகளை கடத்தி சென்றது தெரியவந்தது. இது குறித்து கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் வேல்முருகன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பாக காணப்பட்டு வருகின்றது.

Tags:    

Similar News