உள்ளூர் செய்திகள்

கடலூரில் மண்டல அளவிலான தொல்லியல்துறை ஆய்வு கூட்டம் நடந்தது.

கடலூர் மண்டல அளவிலான தொல்லியல் துறை ஆய்வு கூட்டம்

Published On 2022-06-17 10:34 GMT   |   Update On 2022-06-17 10:34 GMT
கடலூர் விழுப்புரம் கள்ளக்குறிச்சி திருவாரூர் தஞ்சாவூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை ஆகிய 7 மாவட்டத்திற்கு உட்பட்ட மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் கடலூரில் நடந்தது.

கடலூர்:

சென்னை பொருளியல் மற்றும் தொல்லியல் துறை ஆணையர் டாக்டர் பிங்கி ஜோவல் தலைமையில் கடலூர் மண்டலத்திற்கு உட்பட்ட கடலூர் விழுப்புரம் கள்ளக்குறிச்சி திருவாரூர் தஞ்சாவூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை ஆகிய 7 மாவட்டத்திற்கு உட்பட்ட மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் கடலூரில் நடைபெற்றது இதற்கு கடலூர் மண்டல இணை இயக்குனர் ரவி முன்னிலை வகித்தார். இத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் அதன் முக்கியத்துவத்தை குறித்து ஆணையர் பிங்கி ஜோவல் பேசினார். இதில் கூடுதல் இயக்குனர் திட்டம் ராமகிருஷ்ணன் நிர்வாகம் பாரதி ஆகியோர் பேசினர் இதில் கடலூர் மண்டலத்திற்கு உட்பட்ட துணை இயக்குனர்கள் கோட்டை புள்ளிகள் உதவி இயக்குனர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News