உள்ளூர் செய்திகள்

கோவையில் பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டினால் குற்றவியல் வழக்கு

Published On 2022-07-23 10:05 GMT   |   Update On 2022-07-23 10:05 GMT
  • சுவரொட்டிகள், நோட்டீஸ்கள், பதாகைகள் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது.
  • சுவர் ஓவியங்களும், மேம்பாலத்தின் தூண்களில் சுவர்களில் தேச தலைவர்களின் படங்கள் ஒட்டப்பட்டும் வருகிறது.

கோவை:

கோவை மாநகரில் அரசு கட்டிடங்களின் சுவர்கள், மேம்பாலத்தின் தூண்கள், சுரங்கப் பாதைகள், சாலைகளின் மையத்தடுப்பான்கள் உள்ளிட்ட பொது இடங்களில் அரசியல் கட்சியினர், தனி நபர் மற்றும் நிறுவனங்களால் சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன.

மேலும் விளம்பரங்கள், வாழ்த்துச் செய்தி, அறிவி ப்புகள் எழுதப்படுகின்றன. தவிர, மின்கம்பங்களில் கயிறுகளை கட்டியும், மரங்களில் ஆணியால் அடித்தும் விளம்பரப்பதாகைகளை தொங்க விடுகின்றனர். சில சுவரொட்டிகள், நோட்டீஸ்கள், பதாகைகள் போக்குவரத்துக்கு இடையூறாகவும், வாகன ஓட்டுநர்களின் கவனத்தை திசை திருப்பி விபத்துக்கு வழிவகுக்கும் வகையிலும், முகம் சுளிக்கும் வகையிலும் உள்ளதாக பொதுமக்கள் தரப்பில் புகார் கூறப்படுகிறது.

இதனை தடுக்க சுவர் ஓவியங்களும், மேம்பாலத்தின் தூண்களில் சுவர்களில் தேச தலைவர்களின் படங்கள் ஒட்டப்பட்டும் வருகிறது. காந்திபுரம் மேம்பாலத்தின் துண்களில் ஓவியங்கள் வரையும் திட்டத்தையும் கடந்த சில நாட்கள் முன்பு மாநகராட்சி கமிஷனர் தொடங்கி வைத்தார். ஆனாலும் சுவரொ ட்டிகள் ஒட்டப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை தடுக்க மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பொது இடங்கள், அரசு கட்டிடங்கள், சுவர்கள், தெரு விளக்கு கம்பங்கள், சாலை மையத்திட்டுகள், பாலங்கள், இயற்கை வளங்களில் விளம்பரங்கள் எழுதவோ, சுவரொட்டிகள் ஒட்டவோ கூடாது. இதை மீறினால், தொடர்புடைய வர்த்தக நிறுவனம், விளம்பர நிறுவனம், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள், பொது நிகழ்ச்சி, குடும்ப நிகழ்ச்சிக்காக போர்டு வைப்பவர்கள் ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன், குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News