உள்ளூர் செய்திகள்
- நீலகிரி ஓட்டல் ரெஸ்டாரண்ட் அசோசிசன் சார்பில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
- இறுதி போட்டி வருகிற 17-ந் தேதி நடைபெறுகிறது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி ஜெ.எஸ்.எஸ் சர்வதேச பள்ளி விளையாட்டு மைதானத்தில் நீலகிரி ஓட்டல் ரெஸ்டாரண்ட் அசோசிசன் சார்பில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. போட்டியை கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்திபிரியதர்சினி முன்னிலையில் நடைபெற்ற நிகழ்சியில் ரெஸ்டாரண்ட் அசோசியேசன் முன்னாள் தலைவர் முரளிகுமார் கொடியேற்றினார். பிரித்தி கிளாசிக்டவர் மேலாளர் ரசூல் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்சியில் தாஜ், சலிவன்கோர்ட், ஜெம்பார்க், பிரித்திகிளாசிக்டவர், ஸ்டர்லிங், குல்னிமேனர், சன்சைன் உள்ளிட்ட 12 அணிகள் இப்போட்டியில் கலந்து கொண்டது. இதன் இறுதி போட்டி வருகிற 17-ந் தேதி நடைபெறுகிறது. நிகழ்சியயை செல்வம், கனேஷ், சதிஷ், பிராங்களின் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.