உள்ளூர் செய்திகள்

பேச்சுவார்த்தை நடைபெற்ற காட்சி.

சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோர்ட்டு உத்தரவு

Published On 2023-02-03 07:39 GMT   |   Update On 2023-02-03 07:39 GMT
  • சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று காமலாபுரம் ஒன்றிய கவுன்சிலர் செல்விராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
  • இந்தநிலையில், சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீதிமன்றத்திற்கு அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து ஓமலூர் தாசில்தார் வள்ளமுனியப்பன் தலைமையில் அமைதி பேச்சு வார்த்தை நடைபெற்றது.

ஓமலூர்:

சேலம் மாவட்டம் ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்தில் காமலாபுரம் கிராம சாலையை பலரும் ஆக்கிரமிப்புகள் செய்து கட்டிடம் கட்டியுள்ளனர். அதனால், விவசாயிகள், பொதுமக்கள் தங்களது வாகனங்களை ஓட்டி செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு வாகனங்கள் எதிரெதிரே செல்லும் வகையில் அகலமாக இருந்த சாலை ஆக்கிரமிப்பால் சுருங்கி விட்டது.

இந்தநிலையில், சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று காமலாபுரம் ஒன்றிய கவுன்சிலர் செல்விராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்தநிலையில், சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீதிமன்றத்திற்கு அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து ஓமலூர் தாசில்தார் வள்ளமுனியப்பன் தலைமையில் அமைதி பேச்சு வார்த்தை நடைபெற்றது.

இதில், ஒன்றிய ஆணையர் சுந்தர், வட்டார வளர்ச்சி அலுவலர் கருணாநிதி, ஊராட்சி மன்ற தலைவர் பழனிகவுண்டர் காவல்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்தநிலையில், சாலையை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டியுள்ளதாகவும், அதனால், பாதிக்கப்படுவர்கள் என 84 பேர் கலந்துக்கொண்டனர். அப்போது பாதிக்கப்படும் பலரும் ஆக்கிரமிப்பை தாங்களே எடுத்துகொள்ள கால அவகாசம் கேட்டனர். மேலும், ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள், தங்களது வீடு எந்த வகையிலும் சாலையை பதிக்கவில்லை என்றும், தங்களுக்கு ஒரு வீடு மட்டுமே இருப்பதால், நாங்கள் வாழ வழியில்லை என்றும் கூறினர்.

அவர்களுக்கு வேறு இடத்தில் பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து பலரும் முறையாக அளவீடு செய்யவில்லை என்று கூறினர். அப்போது பேசிய தாசில்தார் வள்ளமுனியப்பன், மீண்டும் அளந்து காட்ட அதிகாரிகள் தயாராக இருக்கிறோம். மேலும், அனைவருக்கும் வரைபடம் வழங்கப்படும். அதனால், நீங்கள் தனியார் சர்வேயர் வைத்துகூட அளந்து பார்த்துகொள்ளலாம் என்று தெரிவித்தார்.

மேலும், நீங்களே ஆக்கிரமிப்புகளை எடுத்துகொள்ளுங்கள் என்றும் குறிப்பிட்ட நாளில் முறையாக உரிய பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News