உள்ளூர் செய்திகள்

விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பருத்தி மூட்டைகள்.

ரூ.17.21 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

Published On 2022-07-29 08:43 GMT   |   Update On 2022-07-29 08:43 GMT
  • திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியா–ளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் மாணிக்கம்பாளையம் மையத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது.
  • மொத்தம் ரூ.17.21 லட்சத்திற்கு விற்பனை ஆனது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருச்செங்கோடு:

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியா–ளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் மாணிக்கம்பாளையம் மையத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் விற்பனைக்காக 470 பருத்தி மூட்டைகள் வந்தன.

பி.டி. ரக பருத்தி குவிண்டாலுக்கு ரூ.10 ஆயிரத்து 199 முதல் ரூ.11 ஆயிரத்து 202 வரையிலும், சுரபி ரக பருத்தி குவிண்டாலுக்கு ரூ.10 ஆயிரத்து 499 முதல் ரூ.11 ஆயிரத்து 352 வரையிலும் என மொத்தம் ரூ.17.21 லட்சத்திற்கு விற்பனை ஆனது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News