உள்ளூர் செய்திகள்
பேய்க்குளம் பகுதியில் 5 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
- பேய்க்குளம் பகுதியில் 5 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
- முகாமில் 461 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே சாலைபுதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பேய்க்குளம் பகுதியில் 5 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
பேய்க்குளம் அரசு பள்ளி, சவேரியார்புரம் ஆர்.சி பள்ளி, கீழப்பனைகுளம் டி.டி.டி.ஏ. பள்ளி, மீரான்குளம்துணை சுகாதார நிலையம், கட்டாரிமங்கலம் அங்கன்வாடி மையத்தில் நடந்த முகாமில் செவிலியர்கள் சொர்னலதா, ரமா, லட்சுமி, நாகவள்ளி, பாலம்மாள் ஆகியோர் மக்களுக்கு பரிசோதனை நடத்தி தடுப்பூசி செலுத்தினர். இம்முகாமை சாத்தான்குளம் தாசில்தார் தங்கையா பார்வையிட்டார். இதில் 461 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
முகாம் ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர்கள் ஜேசுராஜ், மகேஷ்குமார், மற்றும் ஆஷா, டெங்கு மஸ்தூர், அங்கன்வாடி பணியாளர்கள் செய்திருந்தனர்.