உள்ளூர் செய்திகள்
குன்னூர் இந்திராநகர் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
- கலசங்களுக்கு கணபதி பூஜை, ஆலய கருவறை நிலவு பூஜை நடத்தப்பட்டது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம்
அருவங்காடு,
குன்னூர் இந்திரா நகர் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் ஆலயத்தில் மங்கள இசையுடன் கலசங்களுக்கு கணபதி பூஜை, துவார பூஜை, ஆலய கருவறை நிலவு பூஜை நடத்தப்பட்டது.
மேலும் நூற்றுக்கணக்கான பெண்கள் தீர்த்த குடம் எடுத்து கோவில் வந்தடைய ஆலயத்தின் கோபுரத்தில் உள்ள கலசத்திற்கு தீர்த்த நீரை ஊற்றி பூஜைகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
ஆலயத்தில் முத்துமாரி அம்மனுக்கு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு அலங்கார பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.