உள்ளூர் செய்திகள்

மண் சாலை சிமெண்ட் சாலையாக மாற்றம்

Published On 2022-11-30 14:53 IST   |   Update On 2022-11-30 14:53:00 IST
  • வார்டு மக்கள் பாராட்டுகள் தெரிவித்தனர்.
  • தெருவிளக்கு, கழிவுநீர் கால்வாய்கள், போன்றவை சீரமைத்துள்ளார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் குன்னூர் மவுண்டன் ஹோம் பள்ளியில் இருந்து சகாயமாதா மருத்துவமனை அருகே வரை பல ஆண்டுகள் மண் சாலையாக இருந்தது. தற்போது அந்த சாலையை மக்களின் பங்களிப்போடு நமக்கு நாமே திட்டத்தின் மூலம் சிமெண்ட் சாலையாக மாற்ற நகராட்சி கவுன்சிலர் மன்சூர் நடவடிக்கை எடுத்தார். அதன்படி அந்த சாலை சிமெண்ட் சாலையாக மாற்றப்பட்டது. அவருக்கு வார்டு மக்கள் பாராட்டுகள் தெரிவித்தனர்நகரமன்ற உறுப்பினர் மன்சூர் கடந்த சில மாதங்களில் மக்களின் பல்வேறு அடிப்படை தேவைகளான நடைப்பாதை, தெருவிளக்கு, கழிவுநீர் கால்வாய்கள், போன்றவை சீரமைத்துள்ளார்.

Tags:    

Similar News