உள்ளூர் செய்திகள்

பல்லடத்தில் ஊராட்சி மன்ற தலைவர்களுடன் கலந்தாய்வு கூட்டம்

Published On 2023-01-27 07:57 GMT   |   Update On 2023-01-27 07:57 GMT
  • வளர்ச்சிப் பணிகள், மற்றும் அடிப்படைத் தேவைகளை முறையாக செய்ய வேண்டும்.
  • பல்லடம் ஒன்றியத்தைச் சேர்ந்த கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.

பல்லடம் :

பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஊராட்சி மன்றத் தலைவர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. பல்லடம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ரமேஷ் தலைமை வகித்தார். ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானுப்ரியா முன்னிலை வகித்தார்.

இதில் கலந்துகொண்ட திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் மதுமிதா பேசுகையில்:- கிராம ஊராட்சிகளில் ஊராட்சி தலைவர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது.

ஊராட்சியில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சிப் பணிகள், மற்றும் அடிப்படைத் தேவைகளை முறையாக செய்ய வேண்டும்.

ஊராட்சிக் கூட்டங்கள் மற்றும் ஆண்டிற்கு 6 முறை கிராம சபை கூட்டங்களை முறையாக நடத்த வேண்டும். ஊராட்சிகளின் வருவாய் ஆதாரங்களை பெருக்கி அதன் மூலம் ஊராட்சியில் நலத்திட்ட பணிகளை செய்ய மீண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் பல்லடம் ஒன்றியத்தைச் சேர்ந்த கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News