உள்ளூர் செய்திகள்

தார்சாலை அமைக்கும் பணிகளை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிடும் காட்சி.

தூத்துக்குடியில் தார்சாலை அமைக்கும் பணி - அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

Published On 2023-07-12 14:24 IST   |   Update On 2023-07-12 14:24:00 IST
  • தூத்துக்குடி 13-வது வார்டுக்குட்பட்ட தனசேகரன் நகர், மேற்கு 4, 5, 6 ஆகிய பகுதிகளில் புதிதாக தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன.
  • அப்பணியை சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாநகராட்சியாக 2008-ல் தரம் உயர்த்தப்பட்ட பிறகு ஊராட்சி பகுதியாக இருந்து இணைக்கப்பட்ட பல்வேறு பகுதிகளில் கட்டமைப்பு பணிகள் முழுமையாக நிறைவு பெறாமல் இருந்து வந்தன. தி.மு.க. ஆட்சி அமைந்தபின் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பின் மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அப்பகுதி மக்கள் வைக்கப்படும் பல்வேறு கோரிக்கைகளை ஒன்றன்பின் ஒன்றாக தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. 13-வது வார்டுக்குட்பட்ட தனசேகரன் நகர், மேற்கு 4, 5, 6 ஆகிய பகுதிகளில் புதிதாக தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன. அப்பணியை வடக்கு மாவட்ட செயலாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், கவுன்சிலர் ஜாக்குலின் ஜெயா, மாவட்ட பிரதிநிதி செல்வக்குமார் மற்றும் பாஸ்கர், மணி, அல்பட் உள்பட பொதுமக்கள் பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News