டேன்டீ தொழிலாளர்களுக்கு 496 வீடுகள் கட்டித் தர நடவடிக்கை
- ரூ.2.10 லட்சம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
- பணிக்கொடை மற்றும் இதர பணப்பலன்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஊட்டி,
தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்தின் சாா்பில் டேன்டீ சங்க நிா்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ஊட்டியில் நடைபெற்றது.கூட்டத்துக்கு நீலகிரி எம்.பி. ஆ.ராசா, அமைச்சா் ராமசந்திரன் ஆகியோா் தலைமை தாங்கினர்.மாவட்ட கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில் அமைச்சா் ராமசந்திரன் கூறும்போது,
2016-ம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்து வந்த தொழிலாளா்கள், அனைத்து தொகையும் செப்டம்பா் முதல் அக்டோபா் மாதம் வரை அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற 677 தொழிலாளா்களுக்கு பணிக்கொடை மற்றும் இதர பணப்பலன்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் அரசு நிலத்தில் தாமாக முன்வந்து வீடுகட்டும் திட்டத்தின் கீழ் இலவச வீட்டு மனைப்பட்டாவும், வீடுகட்ட மானியமாக ரூ.2.10 லட்சம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மூன்றாவது வாய்ப்பாக தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப தாங்களே வீடுகட்டிக் கொள்ள விரும்புவோருக்கு இதே பகுதியில் வீட்டு மனைப்பட்டா இலவசமாக வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்றாா்.
எம்.பி. ஆ.ராசா கூறும்போது,
பயனாளிகளின் பங்களிப்புடன் 496 வீடுகள் கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பயனாளிகள் வசதி வாய்ப்புக்கு ஏற்ப ரூ.5 லட்சம் செலுத்துபவா்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. ஆனால், தற்போது பணம் செலுத்த முடியாது என இலவச வீடுகள் கட்டித் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனா். இந்தக் கோரிக்கை முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்றாா்.
கூட்டத்தில் வனத் துறை முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் சையத் முஜிம்மில் அப்பாஸ், வனத்துறை சிறப்பு செயலாளா் ராஜ்குமாா், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ், மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி உள்ளிட்டோா் கலந்து கொண்டனர்.