ஓசூரில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடிய காட்சி.
ஓசூரில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
- ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உச்சநீதி மன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
- காங்கிரசார் பட்டாசு வெடித்து , இனிப்பு வழங்கியும் மகிழ்ந்தனர்.
ஓசூர்,
அவதூறு வழக்கில், ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு தண்டனையை, உச்சநீதி மன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
இதனை கொண்டாடும் வகையில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், ஓசூரில் காங்கிரசார் நேற்று பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் மகிழ்ந்தனர்.
ஓசூர் எம்.ஜி.ரோட்டில் உள்ள காந்தி சிலையருகிலும், பஸ் நிலையத்திலும் நடந்த நிகழ்ச்சிகளுக்கு மேற்கு மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமை தாங்கி காந்தி சிலைக்கு மாலையணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
மாவட்ட பொருளாளர் மாதேஷ், மாநகர தலைவர் தியாகராஜன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட துணைத் தலைவர்கள் சிவப்ப ரெட்டி, கீர்த்தி கணேஷ் மகிளா காங்கிரஸ் தலைவி சரோஜா மற்றும் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.