உள்ளூர் செய்திகள்

வேதாரண்யத்தில் காங்கிரசார் ரெயில் மறியலில் ஈடுபட்டனர்.

வேதாரண்யத்தில் காங்கிரசார் ரெயில் மறியல்

Published On 2023-04-15 14:30 IST   |   Update On 2023-04-15 14:30:00 IST
  • ராகுல்காந்தி எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து.
  • வேதாரண்யம் ரெயில் நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேதாரண்யம்:

ராகுல்காந்தி எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து இன்று வேதாரண்யம் ரெயில் நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னாள் எம்.பி. ராஜேந்திரன் தலைமையில் டெமோ ரயிலை மறித்து போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து ரெயிலை மறித்த காங்கிரஸ் கட்சியினர் 40 பேரை துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ்சந்திரபோஸ், இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் கைது செய்தனர்.

வேதாரண்யத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு பின் அகல ரயில்பாதை திட்டம் தொடங்கப்பட்டு கடந்த 8-ந் தேதி ரெயில்சேவை தொடங்கிய நிலையில் முதன்முதலாக காங்கிரஸ் கட்சியினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடதக்கது.

Tags:    

Similar News