உள்ளூர் செய்திகள்

பழனி நாடார் எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்.

அமலாக்கத்துறையை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

Published On 2022-06-18 14:30 IST   |   Update On 2022-06-18 14:30:00 IST
  • ராகுல்காந்தியை பழிவாங்கும் நோக்குடன் அமலாக்கத்துறை நடத்தும் விசாரணையை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
  • தென்காசி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தென்காசி:

நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல்காந்தியை பழிவாங்கும் நோக்குடன் அமலாக்கத்துறை நடத்தும் விசாரணையைக் கண்டித்தும், தலைநகர் டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அலுவலக முகப்பில் அமைதியாக ஆர்ப்பாட்டம் நடத்திய காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மீதும் காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதை கண்டித்தும் நேற்று தென்காசி யானைப்பாலம் அருகில் உள்ள வருமான வரித்துறை உதவி ஆணையர் அலுவலகம் முன்பு தென்காசி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பழனி நாடார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தென்காசி மாவட்ட காங்கிரஸ் முன்னணி தலைவர்கள், முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், வட்டார, நகர, கிராம காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள், முன்னணி அமைப்புகள், பிரிவுகள், துறைகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News