உள்ளூர் செய்திகள்
குமாரபாளையத்தில் கோவில் திருவிழா நடத்துவது தொடர்பான பேச்சு வார்த்தை தோல்வி
- தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சண்முகவேல் தலைமையில் அமைதி பேச்சு வார்த்தை நடைபெற்றது.
- இதில் புகார் கூறிய இரண்டு தரப்பினரும் பங்கேற்றனர்.
குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்டம் குமார பாளையம், கல்லங்காட்டுவலசு, நல்லாம்பாளையம் ஓம் சக்தி மாரியம்மன் கோவிலில் திருவிழா கொண்டாடுவது தொடர்பாக குமாரபாளையம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சண்முகவேல் தலைமையில் அமைதி பேச்சு வார்த்தை நடைபெற்றது.
இதில் புகார் கூறிய இரண்டு தரப்பினரும் பங்கேற்றனர். இதில் ஒரு தரப்பினர் சுவாமியை சப்பரத்தில் வைத்து, குறிப்பிட்ட நபரின் டிராக்டரில் தான் வைக்க வேண்டும் என கூறினார்கள். இதற்கு எதிர் தரப்பினர் மறுத்தனர். பேச்சு வார்த்தை சமரசம் ஏற்படாததால் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால் திருவிழா நடத்த தற்காலிகமாக தடை விதித்து தாசில்தார் உத்தரவிட்டார். இந்த சமாதான கூட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, ஆர்.ஐ. விஜய். வி.ஏ.ஓ. செந்தில்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.