உள்ளூர் செய்திகள்
பஞ்சாயத்து அலுவலகத்தை பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.
முறைகேடுகளை கண்டித்து பெரும்பாலை பஞ்சாயத்து அலுவலகத்துக்கு பூட்டு போட்டு போராட்டம்
- பல முறை வார்டு உறுப்பினர்கள் முறையிட்டும் சரியான பதில் இல்லை.
- இன்றுகாலை அலுவலகத்திற்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், பெரும்பாலையில் பஞ்சாயத்து அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் பல்ேவறு முறைகேடுகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து பல முறை வார்டு உறுப்பினர்கள் முறையிட்டும் சரியான பதில் இல்லை.
இதனால் ஆத்திரமடைந்த வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் இன்றுகாலை அலுவலகத்திற்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.