உள்ளூர் செய்திகள்

காேப்புபடம்

பலத்த காற்று வீசுவதால் வாழை சாகுபடி பாதிப்பை தவிர்க்க கவனம் செலுத்த வேண்டும் - விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுறுத்தல்

Published On 2022-06-17 07:32 GMT   |   Update On 2022-06-17 08:05 GMT
  • உழவன் மொபைல் செயலி வாயிலாக வேளாண் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
  • பருவமழை பொழிவு துவங்குவதை உறுதிப்படுத்தும் வகை.

குடிமங்கலம் :

உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில், தென்மேற்கு பருவமழை பொழிவு துவங்காமல் தாமதித்து வருகிறது. வழக்கமாக, ஏப்ரல், மே மாதத்தில் இருக்கும் பலத்த காற்றும், கோடை கால மழையால் வீசவில்லை.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில் பருவமழை பொழிவு துவங்குவதை உறுதிப்படுத்தும் வகையில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது.

உடுமலை வட்டாரத்தில் இவ்வாரத்தில் 7.2 முதல் 10.7, குடிமங்கலம் வட்டாரத்தில் 8.4 முதல் 10.6 கி.மீ., வேகத்தில் காற்றின் வேகம் இருக்கும் என உழவன் மொபைல் செயலி வாயிலாக வேளாண் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.எனவே அறுவடைக்கு தயாராகி வரும் வாழை மற்றும் இதர சாகுபடிகளில், பலத்த காற்றினால், ஏற்படும் சேதத்தை தவிர்க்கும் வகையில், தகுந்த முன்னேற்பாடுகளை செய்து கொள்ளுமாறுவேளாண், தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News