கணினியில் பதிவேற்றம் - முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்
- மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர்-641 604 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
- exweltup@tn.gov.in என்ற இணையதள முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
திருபபூர் :
ராணுவம், கடற்படை, விமானப்படை என முப்படைகளில் பணிபுரிந்து படைப்பணியில் இருந்து ஓய்வு பெற்ற அனைத்து முன்னாள் படைவீரர்களின் விவரங்களும், அவர்தம் விதவையர் விவரங்களும் அந்தந்த மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தில் கணினி மூலம் பதிவேற்றம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அவ்வாறு திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் முன்னாள் படைவீரர்கள் மற்றும் விதவையர்களின் விவரங்களும் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தால் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
இதுநாள் வரை தங்கள் விவரங்களை கணினியில் பதிவேற்றம் செய்யாமல் இருக்கும் முன்னாள் படைவீரர், அவர் தம் விதவையர்கள் உடனடியாக திருப்பூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தங்களின் செல்போன் எண், ஆதார் எண், இமெயில் முகவரி ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும்.
நேரிலோ அல்லது தபாலிலோ உதவி இயக்குனர் (பொறுப்பு), முன்னாள் படைவீரர் நல அலுவலகம், அறை எண்.523, 5-வது தளம், மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர்-641 604 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். 0421 2971127 என்ற தொலைபேசி எண்ணிலோ, exweltup@tn.gov.in என்ற இணையதள முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.