உள்ளூர் செய்திகள்

சீவலப்பேரி அருகே பள்ளி கதவை உடைத்து கம்ப்யூட்டர் திருட்டு

Published On 2023-06-05 14:28 IST   |   Update On 2023-06-05 14:28:00 IST
  • பள்ளியின் அலுவலக கதவு உடைக்கப்பட்டு இருப்பதாக அந்த வழியாக சென்றவர்கள் தலைமையாசிரியருக்கு தகவல் தெரிவித்தனர்.
  • இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை:

பாளை சீவலப்பேரி அருகே உள்ள தோணிக்கரையில் ஆர்.சி. மெட்ரிக் பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக அலெக்ஸ் ஜெரால்டு வேதநாயகம் பணியாற்றி வருகிறார். இந்த பள்ளியின் அலுவலக கதவு உடைக்கப்பட்டு இருப்பதாக அந்த வழியாக சென்றவர்கள் தலைமையாசிரியருக்கு தகவல் தெரிவித்தனர். அவரது புகாரின்பேரில் சீவலப்பேரி போலீசார் அங்கு சென்று பார்த்தனர். அப்போது பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த கம்ப்யூட்டர், ஸ்பீக்கர் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போயிருந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News