உள்ளூர் செய்திகள்

சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

சமுதாய வளைகாப்பு விழா

Published On 2023-10-21 08:50 GMT   |   Update On 2023-10-21 08:50 GMT
  • பாரம்பரிய முறைப்படி சந்தனம் பூசி, வளையல் அணிவித்து, மாலையிட்டு, மலர்கள் தூவி சடங்குகள் செய்யப்பட்டது.
  • 5 வகையான உணவுகள் வாழை இலை போட்டு பறிமாறப்பட்டது.

நாகப்பட்டினம்:

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் மூலம் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த பிரதாபராமபுரத்தில் சமுதாய வளைக்காப்பு விழா நடைப்பெற்றது.

இதில் வேளாங்கண்ணி திருப்பூண்டி பூவைத்தேடி, கீழையூர், உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 100- க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் கலந்துக் கொண்டனர்.

சாதி, மதம் கடந்து கலந்து கொண்டவர்களுக்கு தமிழ் பாரம்பரிய முறைப்படி சந்தனம் பூசி, வளையல் அணிவித்து, மாலையிட்டு, மலர்கள் தூவி சடங்குகள் செய்யப்பட்டது.

வேளாங்கண்ணி பேரூராட்சித் தலைவி டயானா சர்மிளா , கீழையூர் வட்டார திட்ட அலுவலர் சித்ரா ஊராட்சி மன்ற தலைவர் சிவராசு ஆகியோர் கலந்துக் கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை தட்டினை வழங்கினர்.

மேலும் புளி சாதம், தயிர் சாதம், தேங்காய் சாதம், எழுமிச்சை சாதம், இனிப்பு பொங்கல் என ஐந்து வகை உணவு வகைகளை வாழை இலை போட்டு பந்தி பறிமாறப்பட்டது.

கர்ப்பிணி பெண்கள் உட்கொள்ள வேண்டிய உணவு முறைகள் மற்றும் இயற்கை உணவுப் பொருட்களை அங்கன் வாடி பணியாளர்கள் கர்ப்பிணி பெண்களுக்கு செய்து கொடுத்தனர்.

Tags:    

Similar News