உள்ளூர் செய்திகள்
- நேற்று காலை வீட்டில் இருந்த ஆதித்யாவை திடீரென காணவில்லை.
- பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இரணியல், அக்.27-
வில்லுக்குறி மேலப்பள்ளத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 47). இவரது மகள் ஆதித்யா (19). இவர் ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று காலை வீட்டில் இருந்த ஆதித்யாவை திடீரென காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து அவரது தாயார் மஞ்சு (44) கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.