உள்ளூர் செய்திகள்

விழுப்புரம் அருகே தூக்கில் தொங்கிய கல்லூரி மாணவி

Published On 2023-01-07 14:13 IST   |   Update On 2023-01-07 14:13:00 IST
  • கலியபெருமாள் கடந்த சில ஆண்டுக்கு முன்பு கலியபெருமாள் இறந்து போனார்.
  • யாரும் இல்லாத நேரத்தில் கல்பனா வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

விழுப்புரம்: 

விழுப்புரம் அருகே திருவெண்ணைநல்லூர் போலீஸ் சரகம் கொ த்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் கலியபெருமாள். அவரது மனைவி மணிமேகலை. கடந்த சில ஆண்டுக்கு முன்பு கலியபெருமாள் இறந்து போனார். எனவே மணிமேகலை ஈரோட்டில் தங்கி கரும்பு வெட்டும் வேலைபார்த்து வருகிறது. அவரது மகள் கல்பனா (வயது20) தனது பாட்டி பவுனம்மாள் வீட்டில் தங்கி திருவெண்ணைநல்லூரில் உள்ள கல்லூரியில் பி.ஏ. 3-ம் ஆண்டு ஆங்கில இலக்கியம் படித்து வந்தார். 

இன்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கல்பனா வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதனை பார்த்து பாட்டி பவுனம்மாள் பதறி போனார். இதுகுறித்து திருவெண்ணைநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். என்றாலும் மா மாணவி கல்பனா எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. 

Tags:    

Similar News