உள்ளூர் செய்திகள்

கல்லூரி மாணவியிடம் வீடியோ காலில் ஆபாசமாக நடந்து கொண்ட நிர்வாகி கைது

Published On 2022-06-12 16:19 IST   |   Update On 2022-06-12 16:19:00 IST
  • மாணவியிடம் வீடியோ காலில் ஆபாசமாக நடந்து கொண்ட கல்லூரி நிர்வாகியை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
  • கல்லூரி சேர்மன் தாஸ்வின் ஜான் கிரேஸ் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர்.

அருப்புக்கோட்டை:

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டைதெற்கு தெருவில் தனியார் நர்சிங் மற்றும் கேட்டரிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் 400-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த கல்லூரி சேர்மன் தாஸ்வின் ஜான் கிரேஸ் (வயது 48) சில மாதத்துக்கு முன்பு அதே கல்லூரியை சேர்ந்த மாணவியை வீடியோ காலில் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது அவர் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ கல்லூரியில் படிக்கும் மற்ற மாணவர்களிடையே பரவியது. இது மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

இது பற்றிய தகவல் அறிந்ததும் நேற்று கல்லூரி மூடப்பட்டது. கல்லூரி வாசலில் அமர்ந்து மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மாணவியிடம் வீடியோ காலில் ஆபாசமாக நடந்து கொண்ட கல்லூரி நிர்வாகியை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து போலீசார், கல்லூரி சேர்மன் தாஸ்வின் ஜான் கிரேஸ் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டார்.

Tags:    

Similar News