உள்ளூர் செய்திகள்

ஓடைப்பட்டி சமத்துவபுரத்தில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட கலெக்டர் முரளிதரன் ஆய்வு மேற்கொண்டார்.

ஓடைப்பட்டி சமத்துவபுரத்தில் அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் ஆய்வு

Published On 2022-12-01 05:37 GMT   |   Update On 2022-12-01 05:37 GMT
  • ஓடைப்பட்டி பேரூராட்சியில் பல்வேறு செயல்பாடு கள் குறித்து கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
  • காலதாமத மின்றி உரிய விசாரணை மேற்கொண்டு, பயன்கள் வழங்கிட நட வடிக்கைகள் மேற்கொள்ள வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகி யோரை அறிவுறுத்தினார்.

தேனி:

தேனி மாவட்டம், உத்தம பாளையம் வட்டத்திற்கு ட்பட்ட ஓடைப்பட்டி பேரூராட்சி அலுவலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகம் ஆகியவற்றின் செயல்பாடு கள் குறித்து கலெக்டர் முரளிதரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஓடைப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் பணி யாளர்களின் எண்ணிக்கை, வருகை பதிவேடு, நகர்புற மேம்பட்டு திட்டம், பொதி நிதி திட்டம், நகர்ப்புற வேலைவாய்ப்புத்திட்டம், மூலதன மானியத்திட்டம், நமக்கு நாமே திட்டம், அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் மேற்கொள்ள ப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட ப்பணிகள், முடிவுற்ற பணி கள், அதற்கான பதிவேடுகள் குறித்து பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள துறை அலுவ லர்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும், ஓடைப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட சமத்துவபுரத்தில் பொது கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் சமத்துவபுரத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் எண்ணிக்கை, விளையாட்டு பொருட்களின் எண்ணி க்கை, உணவு வகைகள் அரசின் அட்டவணைப்படி முறையாக வழங்கப்படு கிறதா என்பது குறித்தும், உணவின் தரம், உணவு பொருட்களின் இருப்பு அதற்கான பதிவேடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத்தொடர்ந்து, ஓடைப்பட்டி பேரூராட்சி க்குட்பட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகத்தில், பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற மனுக்கள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட மனுக்கள், நிலுவையில் உள்ள மனுக்கள் குறித்த பதிவேடுகள் மற்றும் அரசு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு ள்ள மனுக்கள் நிலை குறித்தும் கலெக்டர் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொ ண்டார்.

பொதுமக்களிட மிருந்து நேரடியாக மற்றும் அரசு இணையதளத்தின் வாயிலாக பெறப்படும் மனுக்கள் மீது காலதாமத மின்றி உரிய விசாரணை மேற்கொண்டு, பயன்கள் வழங்கிட நட வடிக்கைகள் மேற்கொள்ள வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகி யோரை அறிவுறுத்தினார்.

Tags:    

Similar News