உள்ளூர் செய்திகள்

கண்டாச்சிபுரம் வட்டம், கோதண்டபாணிபுரம் ஊராட்சியில் பானுமதி விண்ணப்பத்தினை கலெக்டர் ஆய்வு செய்தார்.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்பித்தவர்களின் வீடுகளில் கலெக்டர் நேரில் ஆய்வு

Published On 2023-08-28 12:24 IST   |   Update On 2023-08-28 12:24:00 IST
  • விண்ணப்பப் பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடத்திட திட்டமிடப்பட்டது.
  • 690 விண்ணப்ப பதிவு முகாம்கள் 5.8.2023 முதல் 16.8.2023 வரை நடை பெற்றது.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், கோதண்டபாணிபுரம் ஊராட்சியில், கலெக்டர் பழனி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ், மாதந்தோறும் ரூ.1,000 பெற விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதுகுறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர், பெண்கள் முன்னேற்றத்திற்கான பல்வேறு சிறப்புத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில், மற்ற மாநிலங்கள் பாராட்டுகின்ற வகையிலும், பின்பற்றுகின்ற வகையில், வரலாற்றுச் சிறப்பு மிக்க திட்டமான, கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின்கீழ், வருகிற செப்டம்பர் 15 முதல் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என அறிவித்து, இவ்வாண்டிற்கு ரூ.7,000 கோடி நிதி ஒதுக்கீடும் செய்துள்ளார்கள். மேலும், தகுதியான பயனாளிகளை தேர்வு செய்திடும் வகையில், குடும்ப அட்டைதாரர் களுக்கு விண்ணப்பம் மற்றும் டோக்கன்கள் வழங் கப்பட்டு, விண்ணப்ப பதிவு முகாம் நடத்திட வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதனடிப்படையில், விழுப்புரம் மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின்கீழ், தகுதியான பயனாளிகளை தேர்வு செய்திடும் வகையில், விண்ணப்பப் பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடத்திட திட்டமிடப்பட்டது. முதல் கட்டமாக 1027 விண்ணப்பப் பதிவு முகாம்கள் 24.7.2023 முதல் 4.8.2023 வரையும், 2-ம் கட்டமாக 690 விண்ணப்ப பதிவு முகாம்கள் 5.8.2023 முதல் 16.8.2023 வரை நடை பெற்றது. இதனைத் தொடர்ந்து, இன்று கண்டாச்சிபுரம் வட்டம், கோதண்டபாணி புரம் ஊராட்சியில், கலை ஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ், விண்ணப் பித்த பானுமதி விண்ணப் பத்தின் மீது ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்தார். இந்நிகழ்வில், கண்டாச்சிபுரம் வருவாய் வட்டாட்சியர் கற்பகம் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News