கோவையில் ரேஷன் கடை பணியாளர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்
- சிறப்பு செயலாக்க திட்டத்திற்கு ஒரு கார்டுக்கு 50 பைசா வழங்குவதை தவிர்த்து ரூ.5 வழங்க வேண்டும்.
- ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கோவை,
தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தினர் கோவை மாவட்ட தலைவர் காளியப்பன் தலைமையில் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மகளிர் உரிமை தொகை விண்ணப்பத்தை வீடு வீடாக விசாரணை செய்ய ரேஷன் கடை பணியாளர்களை பணியமர்த்தக் கூடாது.
இந்த சிறப்பு செயலாக்க திட்டத்திற்கு ஒரு கார்டுக்கு 50 பைசா வழங்குவதை தவிர்த்து ரூ.5 வழங்க வேண்டும். பணியில் உள்ள பணியாளர்களுக்கு பதவி உயர்வு அளித்த பின்னரே புதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
அயல் பணி, பணி பரவல், வெளி மாவட்ட மாறுதல் போன்றவற்றை மண்டல இணை பதிவாளரின் அதிகார வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் ஏற்கனவே ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்பட்ட ஓய்வூதியம் ஆயிரம் தொடர்ந்து வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் ராஜேந்திரன் மாநில பொதுச் செயலாளர் தினேஷ் குமார் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.