உள்ளூர் செய்திகள்

தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்றது.

பட்டுக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம்

Published On 2023-05-25 09:43 GMT   |   Update On 2023-05-25 09:43 GMT
  • ரூ. 20.50 என்ற விலையில் மிண்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் மூலம் விற்பனை செய்து கொடுக்கப்பட்டது.
  • ஏலத்தின் மூலம் ரூ.70,06 விவசாயிகள் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டது.

தஞ்சாவூர்:

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்து றைக்குட்பட்ட தஞ்சாவூர் விற்பனனக் குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பட்டுக்கோட்டை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் பிரதி புதன் கிழமை அன்று தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது.

அதன்படி நேற்று ஒழுங்கு முறை விற்பனைக் கூட வளாகத்தில் தஞ்சாவூர் மற்றும் பேராவூரணி சரகத்திற்கு உட்பட்ட 3 விவசாயிகளிடமிருந்து 3418 கிலோ தேங்காய் ( குடுமியில்லாதது) கிலோரூ. 20.50 என்ற விலையில் மிண்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் மூலம் விற்பனை செய்து கொடுக்கப்பட்டது.

இம்முறை மறைமுக ஏலத்தில் பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு மற்றும் பேராவூரணி பகுதியைச் சார்ந்த வணிகர்கள் கலந்து கொண்டனர்.

இந்த மறைமுக ஏலத்தின் மூலம் ரூ.70,06 விவசாயிகள் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டது.

மேலும் விவசாயிகள் அனைவரும் தங்களது தேங்காயினன இம்மறைமுக ஏலத்தின் மூலம் அதிகபட்ச விலைக்கு விற்பனன செய்து பயனடையுமாறு விற்ப னனக் கண்காணிப்பாளர் முருகானந்தம் கேட்டுக் கொண்டார்.

Tags:    

Similar News