உள்ளூர் செய்திகள்

பணியாளர்கள் போராட்டத்தால் வெறிச்சோடி கிடக்கும் அலுவலகம்.

கூட்டுறவு வங்கி பணியாளர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்

Published On 2023-10-03 05:26 GMT   |   Update On 2023-10-03 05:26 GMT
  • தொடக்க கூட்டுறவு வங்கி மற்றும் அனைத்து பணியாளர் சங்கம் சார்பாக பணியாளர்கள் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினர்.
  • இதனால் பொது மக்களுக்கு இ சேவை மற்றும் வங்கிப் பணிகள் பாதிக்கப்பட்டது.

நிலக்கோட்டை:

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தொடக்க கூட்டுறவு வங்கி மற்றும் அனைத்து பணியாளர் சங்கம் சார்பாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் கட்டாயமாக லாரி மற்றும் வேளாண்மை உபகரணங்களை வாங்க வேண்டும் என்று வற்புறுத்துவதை கண்டித்து போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.

அதன்படி இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தொடக்க கூட்டுறவு வங்கி மற்றும் கடன் சங்க அனைத்து பணியாளர்களும் விடுப்பு எடுத்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் திண்டுக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அலுவலகத்தில் லாரி மற்றும் வேளாண்மை உபகரணங்களின் சாவியை ஒப்படைக்க செல்வதாக தெரிவித்தனர்.

அதன்படி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி மற்றும் அனைத்து பணியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் பணியாளர்கள் சென்றனர். இதன் காரணமாக நிலக்கோட்டை பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பணியாளர் அலுவலகத்தில் பணியாளர்கள் யாரும் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் பொது மக்களுக்கு இ சேவை மற்றும் வங்கிப் பணிகள் பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News