உள்ளூர் செய்திகள்

ஜனாதிபதி திரவுபதி முர்மு சென்னை வந்தடைந்தார் - திருக்குறளை பரிசாக வழங்கிய முதல்வர் ஸ்டாலின்

Published On 2023-08-05 22:42 IST   |   Update On 2023-08-05 22:42:00 IST
  • சென்னை வந்தடைந்த ஜனாதிபதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.
  • அப்போது ஒடியா மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்ட திருக்குறள் புத்தகத்தை வழங்கினார்.

சென்னை:

சென்னை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று இரவு சென்னை வந்தடைந்தார்.

சென்னை விமான நிலையத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை நேரில் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வரவேற்றனர்.

அப்போது, ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் மூலம் ஒடியா மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்ட திருக்குறள் புத்தகத்தை வழங்கினார்.

ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி ஏற்ற பிறகு முதன்முறையாக சென்னை வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News