உள்ளூர் செய்திகள்

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பு தொடக்க விழா

Published On 2023-09-12 09:00 GMT   |   Update On 2023-09-12 09:00 GMT
  • முதலாம் ஆண்டு பி.இ., பி.டெக். மற்றும் முதுகலை மேலாண்மை மாணவர்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா கல்லூரி கலையரங்கில் நேற்று நடந்தது.
  • தங்களது தொலைநோக்கு பார்வை சிறிதாக இருந்தாலும் விடாமுயற்சியுடன் தங்களது பங்களிப்பை அளித்தால் இலக்கை அடைந்து விடலாம் என்று தனராஜ் கூறினார்.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.இ., பி.டெக். மற்றும் முதுகலை மேலாண்மை மாணவர்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா கல்லூரி கலையரங்கில் நேற்று நடந்தது. கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தலைமை தாங்கி, கல்லூரியின் சிறப்பம்சங்களை எடுத்துரைத்தார். கணிதத்துறை தலைவி வாசுகி வரவேற்று பேசினார். மேலாண்மை துறை தலைவர் அமிர்தகவுரி சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார். கல்லூரி செயலாளர் நாராயணராஜன் கலந்து கொண்டு பேசினார்.

கல்லூரி முன்னாள் மாணவரும், பெங்களூரு ஹிட்டாச்சி எனர்ஜி பயன்பாட்டு மேலாளருமான தனராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், 'மாணவர்கள் தங்களது தொலைநோக்கு பார்வையை கண்டுபிடிக்க வேண்டும். அதற்கு தேவையான போட்டித்திறன், தொழில்நுட்ப திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். தங்களது தொலைநோக்கு பார்வை சிறிதாக இருந்தாலும் விடாமுயற்சியுடன் தங்களது பங்களிப்பை அளித்தால் இலக்கை அடைந்து விடலாம்' என்று கூறினார்.

விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். வேதியியல் துறை தலைவி ஜோதி ஸ்டெல்லா நன்றி கூறினார்.

Tags:    

Similar News