உள்ளூர் செய்திகள்

இலவச வீட்டுமனைப்பட்டா வழங்குவதற்கான பயனாளிகள் தேர்வில் அதிருப்தியடைந்த திட்டக்குடி பொதுமக்கள் தாலுகா அலுவலகத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இலவச வீட்டுமனைப்பட்டா வழங்குவதற்கான பயனாளிகள் தேர்வில் அதிருப்தியடைந்த பொதுமக்கள்

Published On 2022-12-24 08:21 GMT   |   Update On 2022-12-24 08:21 GMT
  • 32 பேர் மட்டுமே தகுதியானவர்கள் என பட்டியல் தயாராகி உள்ளது.
  • 50-க்கும் மேற்பட்டோர் திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் ஒன்று திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்: 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே தாழ நல்லூர் கிராமத்தை ச்சேர்ந்த பொதுமக்கள் 250 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் வழங்கவில்லை. இந்நிலையில் தற்பொழுது 32 பேர் மட்டுமே தகுதியானவர்கள் என பட்டியல் தயாராகி உள்ளதாக தகவல் அப்பகுதி மக்கள் மத்தியில் பரவியது. இதில் அதிருப்தியடைந்த அப்பகுதி பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் ஒன்று திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திட்டக்குடி தாசில்தார் கார்த்திக்கை நேரில் சந்தித்து தங்கள் முறையாக பட்டியலை தயார் செய்து அனைவரும் பயன்பெறும் வகையில் இருக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் கார்த்திக் உறுதியளித்தார். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில் தாழநல்லூர் கிராமத்திலேயே தகுதியுடைய பயனாளிகள் வீடு இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வாழ்கிறோம். ஆனால் அதிகாரிகள் சிலர் வெளியூரைச்சேர்ந்த சிலருக்கு எங்கள் ஊரில் பட்டா கொடுக்க முயற்சி ப்பதாக தெரிந்ததால் தாசில்தாரை சந்தித்து முறையிட்டோம் என தெரிவித்தனர். திடீரென தாலுக்கா அலுவலகத்தில் சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News