ஊட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் சிறுவர் பாராளுமன்ற தேர்தல்
- மாணவர்கள் விருப்பப்பட்ட வேட்பாளருக்கு வாக்களித்தனர்
- பிரதமருடன் கல்வி, மருத்துவம், கலை, உணவு, பாதுகாப்பு அமைச்சர்களும் பதவியேற்பு
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி அடுத்த பாக்கியநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் சிறுவர் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது.
இதில் பிரதமர் வேட்பாளராக மாணவர்கள் அ.அபிஷேக், கி.மைதிலி ஆகியோர் போட்டியிட்டனர். தேர்தல் அதிகாரிகள் விஜயலட்சுமி, தர்ஷிகா, மணிகா முன்னிலையில் தேர்தல் நடந்தது.
பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவின்போது அனைத்து மாணவர்களின் அடையாள அட்டைகளும் சரிபார்க்கப்பட்டு, ஓட்டுச் சீட்டில் பெயருக்கு அருகில் கையொப்பம் இட்டனர்.
பின்னர் அவர்களிடம் வேட்பாளர்கள் அடங்கிய தாள் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து மாணவர்கள் விருப்பப்பட்ட வேட்பா ளருக்கு வாக்களித்தனர்.
அதன்பிறகு தலைமை தேர்தல் அதிகாரி ஸ்ரீஜெயந்தி, ரீட்டா சகாயமேரி, மாலதி ஆகியோர் முன்னிலையில் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் மாணவன் அபிஷேக் அதிக ஓட்டுகள் பெற்று குழந்தைகள் பாராளுமன்ற பிரதமராக தேர்வு செய்யப் பட்டான்.
சிறுவர் பாராளுமன்றத்தின் புதிய பிரதமரான அபிஷேக்குக்கு பள்ளி தலைமை ஆசிரியர் வே.வசந்தா பதவி பிரமா ணம் செய்து வைத்தார். அதன்பிறகு கல்வி அமைச்ச ராக பா.மணிகா, மருத்துவ அமைச்சராக கி.மைதிலி, கலைத்துறை அமைச்சராக லோ.தர்ஷிகா, உணவுத் துறை அமைச்சராக பே.லிபிகா, பாதுகாப்பு துறை அமைச்சராக ரா.விஜய லட்சுமி ஆகியோர் பதவி யேற்று கொண்டனர். அப்போது அவர்கள் பள்ளி யின் மேம்பாட்டுக்காக பாடுபடுவதாக உறுதிமொழி எடுத்து கொண்டனர்.