உள்ளூர் செய்திகள்

செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு போட்டியை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்து பார்வையிட்ட காட்சி.

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு போட்டி- சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்து பார்வையிட்டார்

Published On 2022-07-19 09:14 GMT   |   Update On 2022-07-19 09:14 GMT
  • நெல்லை, செஸ் ஒலிம்பியாட் , விழிப்புணர்வு போட்டி, சபாநாயகர்
  • 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னை மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது.

நெல்லை:

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னை மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது.

போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். இந்தியாவில் முதன்முறையாக இந்தப் போட்டி நடப்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்ளிட்ட பகுதியில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு போட்டி இன்று நடைபெற்றது. அதனை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர்.

நிகழ்ச்சியில் கலெக்டர் விஷ்ணு, மாநகராட்சி மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர். ராஜூ, மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து பதிவுபெற்ற கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா ஓட்டுனர் நலவாரிய தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நெல்லை தொழிலாளர் இணை ஆணையர் ஹேமலதா வரவேற்றார்.

சபாநாயகர் அப்பாவு, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத் தலைவர் பொன்குமார் ஆகியோர் கட்டுமான தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

நிகழ்ச்சியில் கட்டுமானம், உடலுழைப்பு தொழிலாளர்களுக்கு கல்வி, இயற்கை மரணம், ஓய்வூதியம், விபத்து மரணம் என 1430 பேருக்கு ரூ. 32 லட்சத்து 57 ஆயிரத்து 400, கட்டுமான தொழிலாளர்களின் பாதுகாப்பு உபகரணங்கள் 2402 பேருக்கு ரூ. 40 லட்சத்து 8,676,

ஓட்டுநர் தொழி–லாளர்களின் பாதுகாப்பு உபகரணங்கள் 3028 பேருக்கு ரூ. 44 லட்சத்து 85,789 என மொத்தம் 6860 பேருக்கு ரூ. 1 கோடியே 17 லட்சத்து 51 ஆயிரத்து 865-க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

முடிவில் தொழிலாளர் உதவி ஆணையர் குலசேகரன் நன்றி கூறினார். 

Tags:    

Similar News