உள்ளூர் செய்திகள்

கல்லிடைக்குறிச்சியில் சேரன்மகாதேவி மேற்கு ஒன்றிய தி.மு.க. அலுவலகம் திறப்பு

Published On 2022-07-11 15:28 IST   |   Update On 2022-07-11 15:28:00 IST
  • தி.மு.க. அலுவலக திறப்பு விழாவிற்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்துப்பாண்டி என்ற பிரபு தலைமை தாங்கினார்.
  • விழாவில் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், ஞானதிரவியம் எம்.பி., தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தனர்.

கல்லிடைக்குறிச்சி:

கல்லிடைக்குறிச்சியில் சேரன்மகாதேவி மேற்கு ஒன்றிய தி.மு.க. கட்சி அலுவலக திறப்பு விழா நடைபெற்றது.

விழாவிற்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்துப்பாண்டி என்ற பிரபு தலைமை தாங்கினார். மேற்கு ஒன்றிய செயலாளர் முத்துகிருஷ்ணன் வரவேற்றார். மாவட்ட பிரதிநிதி சீவலமுத்து குமார் தொகுத்து வழங்கினார். யூனியன் சேர்மன்கள் அம்பை பரணிசேகர், சேரன்மகாதேவி பூங்கோதை குமார், நகர்மன்ற தலைவர்கள் அம்பை பிரபாகரன், வி.கே.புரம் செல்வ சுரேஷ் பெருமாள், நகர செயலாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், ஞானதிரவியம் எம்.பி., தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தனர்.

Tags:    

Similar News