உள்ளூர் செய்திகள்

ஓசூர் சந்திர சூடேஸ்வரர் கோவில் தேர்த் திருவிழாவை முன்னிட்டு, பால் கம்பம் நட்டு பூஜைகள் செய்தபோது எடுத்த படம்

ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில் திருவிழாவையொட்டி தேர் கட்டும் பணி

Published On 2023-02-11 15:34 IST   |   Update On 2023-02-11 15:34:00 IST
  • கோவில் தேர்த் திருவிழா, அடுத்த (மார்ச்) மாதம் 7-ந் தேதி நடைபெறுகிறது.
  • அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

ஓசூர்,

ஓசூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ மரகதாம்பிகை சமேத சந்திரசூடேஸ்வர் கோவில் தேர்த் திருவிழா, அடுத்த (மார்ச்) மாதம் 7-ந் தேதி நடைபெறுகிறது.

இதையொட்டி பால் கம்பம் நடும் விழா நேற்று ஓசூர் தேரிபேட்டையில், கல்யாண சூடேஸ்வரர் கோவில் அருகில் நடைபெற்றது. விழாவிற்கு, ஓசூர் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.ஏ.மனோகரன் மற்றும் கே.கோபிநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முன்னதாக விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து பால் கம்பத்திற்கு பூஜைகள் செய்து, தேர்பேட்டையை சுற்றி வாத்திய முழக்கத்துடன் வீதி உலாவாக பால் கம்பம் கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், மலைக்கோவில் செயல் அலுவலர் சாமிதுரை, தலைமை அர்ச்சகர் வாசீஸ்வரன்,அ.தி.மு.க. பகுதி செயலாளர் ராஜி,கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் நாகராஜ், கல்யாண சூடேஸ்வரர் தேர் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் ஊர் கவுண்டர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.விழாவைத் தொடர்ந்து தேர் கட்டும் பணிகள் தொடங்கியது.

தேர்த் திருவிழா நிகழ்ச்சிகள், வருகிற 28-ந்தேதி அங்குரார்ப்பணம் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. மார்ச் 1-ந்தேதி கொடியேற்றம் மற்றும் மலையிலிருந்து சாமி கீழே அழைத்து வரப்படுதல் ஆகிய நிகழ்ச்சிகளும், அதனைத்தொடர்ந்து 6-ந்தேதி வரை பல்வேறு உற்சவங்கள், பூஜைகளும், 6-ந் தேதி இரவு சாமிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெறும். மறுநாள் 7-ந் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

Tags:    

Similar News