உள்ளூர் செய்திகள்

சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே மின்சார ரெயில் சேவை இன்று மாற்றம்

Published On 2024-05-28 08:02 IST   |   Update On 2024-05-28 08:02:00 IST
  • சென்னையில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் மின்சார ரெயில் சேவையை பயன்படுத்துகின்றனர்.
  • பயணிகள் பாதுகாப்பிற்காக தெற்கு ரயில்வே பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

சென்னை:

சென்னையில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் மின்சார ரெயில் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த மின்சார ரெயில்கள் ஒருநாள் ரத்து செய்யப்பட்டாலோ அல்லது ரெயில் சேவையில் தாமதம் ஏற்பட்டாலோ ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும்.

பயணிகள் பாதுகாப்பிற்காகவும், ரெயிலை பாதுகாப்பாக இயக்கவும் தெற்கு ரெயில்வே பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும். பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தை தவிர்க்கும் வகையில் பெரும்பாலும் இரவு நேரங்களில் இந்த பணிகள் மேற்கொள்ளப்படும்.

பராமரிப்பு பணிகள் காரணமாக ரத்து செய்யப்படும் சேவைகள் குறித்து முன்கூட்டியே பயணிகளுக்கு தெரிவிக்கப்பட்டு விடுவதும் வழக்கம்.

இந்நிலையில், பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை- செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் மின்சார ரயில் சேவை இன்று பகுதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை இயக்கக்கூடிய மின்சார ரயில்கள், சிங்கப்பெருமாள் கோவில் வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News